Rock Fort Times
Online News

தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்வோரை வேரறுப்பதில் ஒத்துழைப்பு தேவை- பாதுகாப்பு அமைப்புகளின் தலைவர்களிடம் அமித்ஷா அறிவுறுத்தல்…!

நாட்டின் பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு வரும் புலனாய்வு அமைப்பின் பன்முகை மையத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சட்ட அமலாக்க முகமைகளின் தலைவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பேசிய அமித்ஷா, தேச பாதுகாப்பில் மத்திய அரசின் ஒட்டுமொத்த அணுகுமுறையை பின்பற்றுமாறு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பாதுகாப்பு அமைப்புகள், புலனாய்வு மற்றும் அமலாக்க அமைப்புகளின் தலைவர்களிடம் அறிவுறுத்தினார். தீவிரவாத கட்டமைப்புகள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்வோரை வேரறுப்பதில் பாதுகாப்பு அமைப்புகளின் ஒத்துழைப்பு தேவை எனவும் வலியுறுத்தினார். இதன்மூலம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நிலையை தடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.  அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் பன்முகமை மையத் துடனான ஈடுபாட்டை அதிகரித்து இணைந்து செயல்படும் அமைப்பாக மாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.  அனைத்து சட்ட அமலாக்க அமைப்புகள், போதைப்பொருள் ஒழிப்பு முகமைகள், இணைய பாதுகாப்பு, புலனாய்வு அமைப்புகள் உறுதியான மற்றும் சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்