சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக, சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. இதையடுத்து, செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஓமாந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மதிய உணவு சாப்பிட்ட பிறகு, நெஞ்சு வலிப்பதாக செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இதைதொடர்ந்து, செந்தில் பாலாஜி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Comments are closed.