Rock Fort Times
Online News

தமிழக உள்துறை செயலாளர் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் அதிரடி மாற்றம்…!

தமிழக உள்துறை செயலாளர் அமுதா மற்றும் மாவட்ட கலெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசாணை
ஒன்றில் கூறப்பட்டு இருப்பதாவது: உள்துறை செயலாளர் அமுதா, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறை செயலாளராக தீரஜ் குமார் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலராக பொறுப்பு வகித்த வி. ராஜாராமன் ஐ.ஏ.எஸ். தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு, பள்ளிக்கல்வித் துறை செயலராக இருந்த ஜெ. குமரகுருபரன் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராகவும், கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக இருந்த டாக்டர் ஜெ. விஜயாராணி இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் உணவு, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத்துறை கூடுதல் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். சிட்கோ மேலாண் இயக்குநராக செயல்பட்ட எஸ். மதுமதி ஐ.ஏ.எஸ். பள்ளிக்கல்வித்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். உணவு, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத்துறை கூடுதல் முதன்மைச் செயலராக பொறுப்பு வகித்த டாக்டர் கே. கோபால் ஐ.ஏ.எஸ். கால்நடை, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை கூடுதல் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலராக(ஆணையர்) பொறுப்பு வகித்த ஹர் சஹாய்மீனா ஐ.ஏ.எஸ். சிறப்பு புத்தாக்கத்துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கலெக்டர்கள் மாற்றம்

மேலும், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் பி.விஷ்ணு சந்திரன், ராணிப்பேட்டை கலெக்டர் எஸ். வளர்மதி, அரியலூர் கலெக்டர் ஜெ. ஆனி மேரி சுவர்ணா, கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜதாவத் ஆகியோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தனது வீட்டில் வளர்க்கப்படும் பசு, ஈன்ற கன்றுடன் கொஞ்சி விளையாடும் பிரதமர் மோடி!

1 of 842

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்