நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், நெல்லை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் நைனார் நாகேந்திரன். தேர்தல் சமயத்தில் ரயிலில் நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம், நைனார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அந்தப் பணத்தை கொண்டு சென்றவர் தெரிவித்தார். இந்த பணம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
இந்த வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஏற்கெனவே பாஜக நிர்வாகிகள் கேசவ விநாயகம், எஸ்.ஆர்.சேகர் மற்றும் நயினார் நாகேந்திரனின் ஓட்டுநர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு நயினாா் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி அழைப்பாணை அனுப்பியது. அதன்படி, நயினார் நாகேந்திரன் இன்று(16-07-2024) முதல்முறையாக ஆஜராகியுள்ளார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.