Rock Fort Times
Online News

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் சங்கத் தேர்தல்: புதிய நிர்வாகிகள் தேர்வு…!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் சங்க தேர்தல் மற்றும் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஓய்வு பெற்ற இணை ஆணையர்கள் தென்னரசு, ஜெகநாதன் மற்றும் ஓய்வுபெற்ற உதவி ஆணையர் தர்மர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்க்கண்டவர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் தலைவராக ஜெ.முல்லை (இணை ஆணையர், சென்னை மண்டலம்-1), பொதுச் செயலாளராக கே.பாரதிராஜா ( உதவி ஆணையர், சென்னை மண்டலம்-2),
பொருளாளராக இரா.ஹரிஹரன் (இணை ஆணையர், கள்ளழகர் திருக்கோயில், மதுரை), துணைத் தலைவர்களாக மு.கார்த்திக் ( இணை ஆணையர், பெரம்பலூர் மண்டலம்), இ.ஜீவானந்தம் ( துணை ஆணையர், திருவண்ணாமலை மண்டலம்), ரெ.சா. வெங்கடேஷ் (துணை ஆணையர், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்), இணை செயலாளர்களாக எம். காந்த ராஜன்(உதவி ஆணையர், விழுப்புரம் மண்டலம்), கி. உமா லட்சுமணன் (உதவி ஆணையர், திருச்சி திருவானைக் கோவில்), அ.இளங்கோ (உதவி ஆணையர், இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில்) மற்றும் 25 மண்டலங்களுக்கும் 25 மண்டல செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 2 ஆண்டுகள் இந்த பொறுப்பில் இருப்பார்கள். வழக்கமாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். ஆனால், கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு நடைபெறவில்லை. தற்போது தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்