Rock Fort Times
Online News

கருப்பு எம்.முருகானந்தம் மீது பாலியல் புகார் கூறிய பெண் நிர்வாகியும் பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்…!

பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு எம்.முருகானந்தம் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக அதே கட்சியைச் சோ்ந்த மாநில பிற்படுத்தப்பட்டோா் பிரிவு செயலாளர் திவ்யா சேஷாத்ரி கட்சியின் மேலிட தலைவர்களிடம் புகார் மனு அளித்திருந்தார். அதன் அடிப்படையில், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி கட்சி பொறுப்பிலிருந்து முருகானந்தத்தை நீக்கி தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிலையில் கருப்பு எம். முருகானந்தம் மீது பாலியல் புகார் கூறிய திவ்யா சேஷாத்ரியும் பாஜகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜகவின் ஓபிசி அணியின் மாநில தலைவர் வீர திருநாவுக்கரசு வெளியிட்ட அறிக்கையில், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் ஓபிசி அணியின் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து அந்தப் பெண் உடனடியாக விடுவிக்கப்படுகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்