Rock Fort Times
Online News

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்…- வெளியானது இறுதி வேட்பாளர் பட்டியல்…!

தமிழகத்தில் உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டப் பேரவை தொகுதிகளிலும் அக்டோபர் மாதம் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்து, பரிசீலனை நிறைவடைந்துள்ள நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று(19-09-2026) வெளியானது. அதன்படி, மதுராந்தகம் சட்டப் பேரவை தொகுதியில் தவெக சார்பில் முன்னாள் எம்எல்ஏ மரகதம் குமரவேல், திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன், அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கணிதா சம்பத், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகி ராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி ஆகியோர் களத்தில் உள்ளனர். இவர்களுடன் சுயேட்சை வேட்பாளர்கள் 22 பேர் என மொத்தம் 27 பேர் போட்டியிடுகின்றனர். தாராபுரம் சட்டப் பேரவை தொகுதியில் தவெக சார்பில் முன்னாள் எம்எல்ஏ சத்தியபாமா, திமுக சார்பில் எஸ்.சுகன்யா, அதிமுக சார்பில் கே.பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த வேட்பாளர்களுடன் சுயேட்சை வேட்பாளர்கள் 17 பேரையும் சேர்த்து மொத்தம் 22 பேர் களத்தில் உள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்