முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள்: சென்னையில் உள்ள நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை…!
தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 8வது நினைவு நாள் இன்று (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்படுகிறது. கருணாநிதி நினைவுநாளையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு,
கனிமொழி எம்பி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்ற அமைதிப் பேரணி சென்னை, அண்ணாசாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்பட்டது.

பின்னர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Comments are closed.