மதுரை, தோப்பூரில் அமைக்கப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு கட்டிடத்தில்
வருகிற 2027-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் வெளிநோயாளிகளுக்கு மருத்துவ சேவை தொடங்கப்படும் என்று மத்திய அரசு, சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனராக ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் பேராசிரியர் டாக்டர் விர் சிங் நேகி நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குனராக பணியாற்றிய டாக்டர் மங்கு ஹனுமந்த ராவுக்கு பதிலாக விர் சிங் நேகி நியமிக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் முழுமையான மருத்துவ சேவைகளை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது நிர்வாகத் தலைமையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.