Rock Fort Times
Online News

மறைந்த இயக்குனர் கே.பாக்யராஜ், பின்னணி பாடகி ஜானகி உள்ளிட்டோருக்கு தமிழக சட்டமன்றத்தில் இரங்கல்…!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று(07-08-2026) தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக மறைந்த பிரபலங்களுக்கு சட்டமன்றத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். அதன்படி, மறைந்த திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ், கவிஞர் மற்றும் எழுத்தாளர் புவியரசு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுருளிவேல், பின்னணி பாடகி ஜானகி, எழுத்தாளர் பூமணிக்கு பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் மறைந்த பிரபலங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்