மேகதாது விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?* உதயநிதி ஸ்டாலின் கேள்விக்கு முதல்வர் விஜய் பதிலடி…!
தமிழக சட்டப்பேரவையில் மேகதாது அணை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை என்ன செய்தது?, அனைத்துக்கட்சி கூட்டத்தை எப்போது கூட்டுவீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்து பேசுகையில்,
காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சில விவரங்களை கேட்டுள்ளன. காவிரி நமது உயிராதாரம். நம்முடைய உணர்வு ரீதியான ஒன்று. அதனால் காவிரியை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் துளியும் நமக்கு இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. மேகதாது விவகாரத்தில் நாம் அனைவரும் சேர்ந்து தான் தீர்மானம் நிறைவேற்றினோம். அதை நேர்முக கடிதமாக பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளோம். காவிரி நதிநீர் பங்கீட்டிலும் சரி, மேகதாது அணை கட்டும் முயற்சியையும் தடுப்பதிலும் சரி தமிழ்நாட்டின் உரிமைகளை கொஞ்சம் கூட விட்டுத்தர மாட்டோம். அதுதான் நம்முடைய நிலைப்பாடும். அதேநேரத்தில் கர்நாடகாவில் சில அணைகள் கட்ட ஆரம்பித்தது பற்றி 1969ம் ஆண்டில் ஒரு விவாதம் நடந்தது. அப்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்தது யார்? அப்போது அணை கட்ட அனுமதித்தது யார்? என்பது போன்ற மலிவான கேள்விகளை எழுப்ப விரும்பவில்லை. அது நம்முடைய நோக்கமும் இல்லை. காவிரி விவகாரத்தை கவனமாக கையாள வேண்டும். எந்த கட்சி ஆள்கிறது, யாருக்கு பெருமை என்றெல்லாம் பார்கக் கூடாது. இது தமிழக மக்களின் பிரச்சனை என பார்க்க வேண்டும்.
ஏற்கனவே இருந்த எதிர்க்கட்சி தலைவர் கருத்திருமன் சொன்னதை சபையில் சொல்ல விரும்புகிறேன். காவிரி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு மாநிலங்களும், மத்திய அரசும் அமர்ந்து முடிவெடுக்க வேண்டும் என 1969ம் ஆண்டிலேயே பேசியிருக்கிறார். ஆனால், அதன் பிறகு பிரச்சனை வேறு மாதிரி சென்றுவிட்டது என எல்லோருக்கும்
தெரியும். சட்டப்படி இந்த பிரச்சனையை அணுகுவதில் எந்த மாற்றமும் இல்லை. இருந்தாலும் ஒரு முயற்சியை மேற்கொள்ளலாம் என நினைத்து பெங்களூரு பயணத்திற்கு திட்டமிட்டோம். இதுதொடர்பாக பல கருத்துகள் வந்தன. நாம போக நினைத்ததற்கான காரணம் ஒருவேளை இந்த பிரச்னையை தீர்ப்பதற்கான ஒரு நேர்மறையான வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் அண்டை மாநிலத்துடன் பேசி பார்த்தால் என்னவென நினைத்தேன். ஒருவேளை அந்த பயணத்தில் அவமானம் நேர்ந்தால் என்ன செய்வது என்று சிலர் கேட்கிறார்கள். அப்படி நடந்தால் தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்க தயாராக இருக்கிறேன். குறுவை சாகுபடிக்கான நிவாரணம் பற்றி எதிர்க்கட்சி தலைவர் கேட்டு இருந்தார். இதற்கான நிவாரணம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலே நாங்கள் தான் என சொல்லிக்கொள்பவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது என தெரியவில்லை. முன்ன பின்ன பேப்பர் படித்து இருந்தால் நாட்டில் என்ன நடக்கிறது என தெரிந்து இருக்கும்” என முதலமைச்சர் விஜய் பதிலடி தந்தார்.

Comments are closed.