Rock Fort Times
Online News

8-ம் ஆண்டு நினைவு தினம்: திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…!

தமிழக முன்னாள் முதலமைச்சர், முன்னாள் திமுக தலைவர் முத்தமிழறிஞர் கருணாநிதியின் 8ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வழிகாட்டுதலின் படி மத்திய மாவட்ட கழக செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட கழக செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான மு.அன்பழகன் முன்னிலையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், மத்திய மாவட்ட பொருளாளர்
ஏ.கே.துரைராஜ், கருணை ராஜா, மாவட்ட துணைச் செயலாளர்கள் முத்துச்செல்வம், விஜயா ஜெயராஜ், இளங்கோ, மோகன்தாஸ், கலைச்செல்வி, மாணிக்கம், கவிதா, சோழன் சம்பத், உத்தமர் சீலி ராஜேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்