மாதந்தோறும் வரும் அமாவாசையை விட தை அமாவாசை சிறப்பு வாய்ந்ததாகும். இந்நாளில், இறந்த தங்களது முன்னோர்களுக்கு நீர்நிலைப் பகுதிகளில் தர்ப்பணம் கொடுத்தால் அவர்களது ஆன்மா சாந்தியடையும், அவர்களது ஆசி கிட்டும் என்பது ஐதீகம். மற்ற அமாவாசையில் தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள் தை அமாவாசையில் செய்தால் வருடம் முழுக்க முன்னோர்களுக்கு விரதம் இருந்து படையல் வைத்ததிற்கு சமம் என்பது நம்பிக்கை. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு தை அமாவாசை நாளான இன்று(09-02-2024) அதிகாலை முதலே ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், கீதாபுரம், ஓடத்துறை, குடமுருட்டி அய்யாளம்மன் படித்துறைகளில் பொதுமக்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.