Rock Fort Times
Online News

திருத்தம் செய்யப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக மாணவர் பெருமன்றத்தினர் போராட்டம்…!

3 குற்றவியல் சட்டங்களில் திருத்தம் செய்து மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டம், ரயில் மறியல் போராட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் திருச்சி காஜாமலையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியின் முன்பு மாணவ- மாணவிகள் புதிய சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலச் செயலாளர் தினேஷ் குமார் கண்டன உரையாற்றினார்.  மாவட்டச் செயலாளர் ஜெய்லானி, தலைவர் நந்தா, சட்டக் கல்லூரி கிளை பொறுப்பாளர் செல்வி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்