திருச்சி மாநகர காவல் துறை சார்பில் மன்னார்புரம் சிக்னல் பகுதியில் ரோந்து வாகனங்களில் செல்லும் போலீசாருக்கு பாக்கெட் கேமரா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாநகர போலீஸ் கமிஷனர் எம். சத்திய பிரியா ஐபிஎஸ் தலைமை தாங்கி ரோந்து போலீசார் 54 பேருக்கு பாக்கெட் கேமராக்கள் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
இந்த பாக்கெட் கேமரா, ரோந்து போலீசாருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு வழக்கு தொடர்பாக சம்பவ இடத்துக்கு சென்று அவர்கள் அதை விசாரிக்கும் போது முழுவதும் கேமராவில் பதிவாகிவிடும். விசாரணைக்கு அந்த பதிவுகள் நல்ல பயனை அளிக்கும். இந்த கேமராக்களின் மூலம் 3 நாட்கள் தொடர்ச்சியாக பதிவு செய்து கொள்ள முடியும் .இது 64 ஜி.பி மெமரி திறன் உள்ளது. அவ்வப்போது பேக்கப் எடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.
குறைந்தபட்சம் 5 மீட்டர் தொலைவில் நடைபெறுவதை துல்லியமாக பதிவு செய்து கொள்ளலாம். திருச்சி மாநகரில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பார்களில் மதுபானம் விற்பவர்கள் மீதும், கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது . திருச்சி மாநகரில் அனுமதி இல்லாத பார்கள் எதுவும் கிடையாது. மதுபான பார்களில் சட்ட விரோதமாக மதுவிற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.