தமிழ் சினிமாவில் நாயகன், குணச்சித்திர மற்றும் வில்லன் பாத்திரங்களில் நடித்து மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகர் சரத்பாபு. இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி இன்று ( 22.05.2023 )உயிரிழந்தார். அவருக்கு வயது 71 . இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.மேலும், ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு சரத்பாபு உயிரிழந்ததாக வதந்தி தகவல் பரவி வந்த நிலையில், அவருடைய குடும்பத்தினர் அவர் நலமுடன் உள்ளார் என்று விளக்கம் கொடுத்தனர். இதனையடுத்து அவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.