Rock Fort Times
Online News

திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில் மாநில பேச்சு போட்டி…

முத்தமிழ் அறிஞர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட  மாநகர திமுக பொறியாளர் அணி சார்பில், மாநில அளவிலான பேச்சு போட்டி மற்றும் கருத்தரங்கம் அரியமங்கலம் எஸ்.ஐ.டி. கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர எம்.ஜியாவுதீன் , மாநகர பொறியாளர் அணி அமைப்பாளர் சி.எம்.மெய்யப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட பொறியாளர் அணி தலைவர் இ.தென்னரசு வரவேற்று பேசினார் . திருச்சி தெற்கு மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்கள், பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு பேசினர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட பொறியாளர் அணி மாநிலச்செயலாளர் கு.கருணாநிதி , திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன், கவிஞர் நந்தலாலா ஆகியோர்   பரிசுகளை வழங்கினர் . தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில அணி செயலாளர்கள் கே.என். சேகரன், வண்ணை அரங்கநாதன், அ.த.த.செங்குட்டுவன், என்.செந்தில், B.A.நூர்கான், ஆறு.சந்திரமோகன், பொன்.செல்லையா, V.சரோஜினி, M.தமிழ்ச்செல்வம், K.K.K.கார்த்திக், R.மணிமேகலை ராஜபாண்டி மற்றும் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழகச் செயலாளர்கள் நீலமேகம், கே.எஸ்.எம். கருணாநிதி, எஸ். சிவக்குமார், எம்.பழனியாண்டி, எம்.ஆர்.டி.பி.கே.தங்கவேல், மாவட்ட  மாநகர பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனா். இறுதியாக மாநகர பொறியாளர் அணி தலைவர் மு. இன்பா நன்றி கூறினார்.

தவெக செயற்குழு கூட்டத்திற்கு மாஸ் என்ட்ரி தந்த விஜய்...! யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்..!

1 of 899

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்