ரெயில்வே ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படியை இணைக்க வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படியை உயர்த்தி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் உயிர்நீத்த 17 ரயில்வே ஊழியர்களுக்கு செவ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு மற்றும் ரயில்வே தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், ரயில்வே தனியார்மயக் கொள்கையை கைவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து எஸ்.ஆர்.எம்.யூ தலைவர் ராஜா ஸ்ரீதர் தலைமையில், எஸ்.ஆர்.எம்.யூ துணைப் பொதுச்செயலாளர் வீரசேகரன் முன்னிலையில் திருச்சி தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 500க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் ராஜாஸ்ரீதர் கூறுகையில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்யவேண்டும் என தொடர்ந்து போராடிவந்த நிலையில் தற்போது, மத்திய அரசு உத்தரவாதத்துடன் கூடிய பென்ஷன் வழங்குவதாக அறிவித்துள்ளது. வரும் காலங்களில் அதனையும் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் எஸ்ஆர்எம்யூ ஈடுபடும் என்று கூறினார்.
Comments are closed.