Rock Fort Times
Online News

மதவெறி அரசியலை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும்: மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி…!

மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி திருச்சியில் இன்று(19-09-2024) நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கொள்கையை அமல்படுத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. மாநில சட்டமன்றத்தின் அதிகாரத்தை குறைத்து மாநகராட்சி ஆக மாற்றி விடுவார்கள். இந்தியா- இலங்கை கடற்பரப்புக்கு இடையே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது
மீன்பிடி உபகரணங்களை கைப்பற்றுவது போன்றவை தொடர்வதால் உள்நாட்டு மீன் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தால் கைதான மீனவர்களை மொட்டை அடித்து அனுப்பி உள்ளது மனித உரிமை மீறல் செயலாகும். குஜராத் மீனவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருந்தால் இந்திய அரசு பொறுத்துக் கொண்டிருக்குமா? ஆகவே, இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும். தமிழகஅரசு தேர்தல் வாக்குறுதி படி ஓராண்டு காலத்திற்குள் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வராக தகுதி உள்ளது. அந்த முடிவை திமுக எடுத்தால் நாங்கள் வரவேற்போம். தமிழகத்தில் பெரியாரைத் தவிர்த்து அரசியல் செய்ய இயலாது என்ற எதார்த்தத்தை உணர்ந்துள்ள நடிகர் விஜயை பாராட்டுகிறேன். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு வக்பு வாரிய தலைவர் பதவியை கொடுப்பது சிறந்தது. இதனால்,அரசியல் கட்சிகளின் தலையீடு,நெருக்கடி,நிர்ப்பந்தம் இல்லாமல் சுயமாக செயல்பட வழிஏற்படும். வக்பு வாரிய சொத்துக்களில் இருந்து வாடகை வருவாய் அதிகரிக்கும் பட்சத்தில், இஸ்லாமிய மக்களின் நலனுக்காக, அரசிடம் நிதி உதவி கேட்க வேண்டிய தேவை ஏற்படாது. உண்மைக்கு மாறாக பேசுவதை பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. அவர்கள் மதவெறி அரசியல் செய்து நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் மத வேறுபாடு இல்லாமல் குடும்ப உறவுகளாக அமைதியாக வாழ்ந்து வருகிறோம். மதவாதத்தை யார் தூண்டினாலும், அதுவே அவர்களுக்கு எதிராக அமையும். நாட்டின் வளர்ச்சிக்கு மனிதநேயம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை பாதுகாப்பது அவசியம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஷெரீப்,மாவட்டச் செயலாளர் பக்கீர் மைதீன், அவை தலைவர் ஷேக் தாவூத் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்