Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் வேலை கேட்டு கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்…

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோவிலின் தூய்மை பணியில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 120 பேர் கடந்த 16 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் அனைவரும் கடந்த 31ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டு புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். தங்களுக்கு மீண்டும் வேலை வழங்க கோரி அவர்கள் ஏற்கனவே 2 கட்டங்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருந்தாலும் கோவில் நிர்வாகம் செவிசாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று(06-02-2024) தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்காத ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தை கண்டித்தும், லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டு வேலைக்கு ஆள் சேர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த விஷயத்தில் இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு நேரடியாக தலையிட வலியுறுத்தியும், தொழிலாளர்களின் வறுமையை வெளிப்படுத்தும் வகையில் சிஐடியு திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ரங்கா ரங்கா கோபுரம் அருகே கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சிஐடியு திருச்சி மாநகராட்சி தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். போராட்டத்தை சங்க மாவட்ட செயலாளர் மாறன் துவக்கி வைத்தார். போராட்டத்தை விளக்கி சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, வாலிபர் சங்க ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் சந்துரு, சிஐடியு நிர்வாகிகள் சுப்பிரமணி, கோவிந்தன், செல்லமுத்து, முத்து, கணேசன் ஆகியோர் பேசினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 78 பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழக அமைச்சரவை மாற்றமா? முதல்வர் மு.க .ஸ்டாலின் பதில்...

1 of 842

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்