Rock Fort Times
Online News

திருச்சியில் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய வாகன டிரைவர் மீது வழக்கு பாய்ந்தது…(வீடியோ இணைப்பு)

திருச்சி அரியமங்கலம் போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஐயப்பன் டி.வி.எஸ்.டோல்கேட் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு டாட்டா ஏசி வாகனம் ஒன்று அந்தப் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி சென்றதாக கூறப்படுகிறது. உடனே, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஐயப்பன் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி வழக்கு பதிவு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாகனத்தின் டிரைவர் வசந்த், சப்-இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தையால் திட்டி, அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி கே.கே.நகர் போலீசில் ஐயப்பன் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி, வசந்த் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

யார் இந்த தேவதை ! ரசிகரின் குழந்தைக்கு பெயர் வைத்த சிவகார்த்திகேயன்..

1 of 841

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்