Rock Fort Times
Online News

விஜய் பிரிக்கும் வாக்குகள் திமுகவின் வெற்றியை தவிடு பொடியாக்கும்…* சொல்கிறார் மு.க.அழகிரி மகள் கயல்விழி!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் முதல் முறையாக களம் காண்கிறது. அவர், தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கட்டுக்கடங்காத கூட்டம் கூடுகிறது. இதுகுறித்து மு.க.அழகிரி மகள் கயல்விழி கூறுகையில், திமுகவுக்கு எதிராக நான் பேசவில்லை. கூட்டணி பலமும், பெரிய அளவிலான எதிர்ப்பற்ற தன்மையும் திமுகவை திரும்பவும் ஆட்சிக்குக் கொண்டு வருவது போல்தான் இருந்தது. ஆனால் விஜய் வந்தபிறகு நிலைமையே வேறு. களத்தில் விஜய் விளையாடுகிறார். நிச்சயம் கணிசமான வாக்குகளை அவர் பிரிப்பார். திமுக அவரை குறைத்து எடைபோடுகிறது. அவர் பிரிக்கும் வாக்குகள் திமுகவின் வெற்றியை தவிடு பொடியாக்கும். விஜய்யால் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத தொங்கு சட்டசபை கூட அமையலாம். இந்த மாதிரியான சூழலில் அப்பாவையும், சீனியர் நிர்வாகிகளையும் அனுசரித்து, அவர்களுடைய அனுபவத்தைப் பயன்படுத்தி மு.க.ஸ்டாலின் வெற்றி பெற நினைக்க வேண்டும். அதை செய்யாமல் சர்வாதிகாரமாக செயல்படுவது திமுகவின் வெற்றியை நிச்சயம் பாதிக்கும். இதே ஆதங்கம் கட்சியின் சீனியர்கள் பல பேரிடம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்