Rock Fort Times
Online News

வேளாங்கண்ணி மாதா திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்…!

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கிய மாதா பெருவிழாவை முன்னிட்டு பக்தர்களின்  நலன்கருதி  காரைக்கால்- தஞ்சாவூர் டெமு சிறப்பு ரயிலானது (06835) வியாழக்கிழமை முதல் செப்டம்பர்  7 வரை திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  அதேபோல, திருச்சி- வேளாங்கண்ணி சிறப்பு ரயிலானது (06866) வியாழக்கிழமை முதல் செப். 7 வரையிலும், வேளாங்கண்ணி – தஞ்சாவூர் சிறப்பு ரயிலானது (06863) வியாழக்கிழமை முதல் செப் 8 வரையிலும் இயக்கப்படும்.  விழுப்புரம் -நாகப்பட்டினம்  மெழு சிறப்பு ரயில்கள் (06129, 06130) மற்றும் வேளாங்கண்ணி – நாகப்பட்டினம் டெமு சிறப்பு பயணிகள் ரயில்கள் (06858, 06868), நாகப்பட்டினம் – வேளாங்கண்ணி டெமு சிறப்பு பயணிகள் ரயில்கள் 06857, 06867) வியாழக்கிழமை முதல் செப். 8 வரையிலும் இயக்கப்படும். வேளாங்கண்ணி- திருச்சி டெமு முன்பதிவற்ற சிறப்பு ரயில்கள் (06864, 06865)  ஆ 30, செப் 8, 9 ஆம் தேதிகளில் இயக்கப்பட உள்ளன.  மேற்கண்ட தகவல் திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்