திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலிலுக்குச் சொந்தமான திம்மராயசமுத்திரம் கிராமம் வார்டு எண்.2- ல் 364 சதுர அடி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் திருச்சி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவின்படி கோர்ட் அமீனா, திம்மராயசமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர், திருக்கோயில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிக்கப்பட்ட குடியிருப்பு இடம் மீட்கப்பட்டது. இந்த இடத்தின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் ஆகும்.

Comments are closed.