திருச்சி மாநகர பகுதிகளில் அக்.18ம் தேதி குடிநீர் விநியோகம் ரத்து… * மாநகராட்சி ஆணையர் பொன்மணி தகவல்..!
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது தரைமட்ட நீர்தேக்க தொட்டி நீரேற்று நிலையங்களுக்கு ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இந்த துணை மின் நிலையத்தில் நாளை (17.10.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான மத்திய சிறைச்சாலை, சுந்தரராஜ நகர், ஜே.கே.நகர், செம்பட்டு, காஜாமலை, ரெங்கா நகர் , சுப்ரமணிய நகர், வீ .என் .நகர், தென்றல் நகர், கவி பாரதி நகர், காமராஜ் நகர், கிராப்பட்டி, அன்பு நகர், எடமலைப்பட்டி புதூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், தென்றல் நகர். ஈ.பி.காலனி, அரியமங்கலம், மலையப்ப நகர், ரயில் நகர், முன்னாள் ராணுவத்தினர் காலனி, மேல கல்கண்டார் கோட்டை, செக்ஸன் ஆபீஸ், நாகம்மை வீதி,
மேல கல்கண்டார் கோட்டை நூலக பகுதி, பொன்னேரிபுரம், அம்பேத்கார் நகர், விவேகானந்த நகர், எல்.ஐ.சி.காலனி, விஸ்வநாதபுரம், கே. சாத்தனூர், ஆனந்த நகர், சத்தியவாணி முத்து நகர், கே.கே.நகர், அம்மா மண்டபம், ஏ. ஐ. பி இ.ஏ.நகர், பாலாஜி அவன்யூ, தேவி பள்ளி பகுதி, மேலூர், பெரியார் நகர், திருவானைக்காவல், தேவதானம், விறகுப்பேட்டை, மகாலட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளில் 18.10.2026 ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது. 19.10.2026 அன்று முதல் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். ஆகவே, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் நே.பொன்மணி கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.