Rock Fort Times
Online News

பருவமழை தொடங்கியாச்சு; மாணவர்களை பாதுகாக்க பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு…!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதை முன்னிட்டு, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.  அதில்,

  • வீடு மட்டும் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
  • மழைக்காலங்களில் நன்கு காய்ச்சி வடிகட்டிய நீரைப் பருக வேண்டும் என அறிவுறுத்த வேண்டும்.
  • பருவகால மாற்றங்களால் ஏற்படும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும்.
  • மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் காலதாமதம் இல்லாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை / ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருத்துவ சிகிச்சை பெற அறிவுறுத்த வேண்டும்.
  • மழை காலங்களில் மாணவர்களும், அவர்தம் உடைமைகளும் மழையில் நனையாமல் இருக்கும் பொருட்டு மழைக் கோட்டுகளையோ அல்லது குடைகளையோ பயன்படுத்த அறிவுரை வழங்க
    வேண்டும்.
  • மழைக்காலங்களில் இடி, மின்னல் போன்வற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்குவது கூடாது என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த அறிவுரைகளை அனைத்து ஆய்வு அலுவலர்களும், பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கூடுதல் கவனத்துடன் மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்