Rock Fort Times
Online News

திருச்சியில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட சிறப்பு முகாம்- கலெக்டர், மேயர் ஆய்வு…

திருச்சி மாநகராட்சி மண்டலம் 4 மற்றும் 5 க்கு உட்பட்ட 57, 58 மற்றும் 62 ஆகிய வார்டுகளுக்கு எடமலைப்பட்டிபுதூர் தம்பியப்பா திருமண மண்டபம் மற்றும் மண்டலம் 5 க்கு உட்பட்ட 28, 29 ஆகிய வார்டுகளுக்கு ஜாகிர் உசேன் பார்க் மைதானத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இதில், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். இந்த முகாம்களை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை விரைவில் பரிசீலனை செய்து அவர்களுக்கு உரிய பலன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இம்முகாமில் மண்டலத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, உதவி ஆணையர்கள் சண்முகம், வேங்கட்ராமன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் முத்துச்செல்வம், பைஸ் அகமது, கமால் முஸ்தபா, சுபா, கவிதா செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்