Rock Fort Times
Online News

நீட் தேர்வு விவகாரம்: த.வெ.க. ஆட்சியில் போராட்டம் நடத்திய 1,800 பேர் மீதான 65 வழக்குகள் வாபஸ்…! 

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக தவெக ஆட்சியில் போராட்டங்களில் ஈடுபட்ட 1,800 பேர் மீது பதிவு செய்யப்பட்ட 65 குற்ற வழக்குகளையும் திரும்பப் பெற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (அக்.31) வெளியிட்ட அறிக்கையில்,

தமிழ்நாட்டில் 10.05.2026 முதல் 31.07.2026 வரை நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு காலகட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 1,800 நபர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் மொத்தம் 65 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவை பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ளன. தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் குறித்தும், அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதனடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு இவ்வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்து கவனமுடன் பரிசீலனை செய்து, நீட் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 1,800 நபர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 65 குற்ற வழக்குகளையும் திரும்பப் பெறுவதற்கான உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இவ்வாறு தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்