Rock Fort Times
Online News

புலன் விசாரணையில் திறம்பட செயல்பட்டமைக்காக தமிழகத்தைச் சேர்ந்த 2 போலீஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருது…!

புலன் விசாரணையில் திறம்பட செயல்பட்ட தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த இரு அதிகாரிகள்
2026-ம் ஆண்டிற்கான “கேந்திரிய கிருஹமந்திரி தக்ஷதா” பதக்கத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

இந்திய அரசின் உள்துறை அமைச்சகம், காவல்துறையில் சிறந்த தொழில்முறைத் திறன், அர்ப்பணிப்பு மற்றும் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள நாட்டின் காவல்துறை அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில், “கேந்திரிய 2026” விருதை அறிவித்துள்ளது. இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படுபவரும், தேசிய ஒற்றுமையின் வடிவமைப்பாளருமான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினமான அக்டோபர் 31 அன்று இந்த விருது அறிவிக்கப்படுகிறது. 2026ம் ஆண்டிற்கான இப்பெருமைமிக்க விருதிற்கு, புலன் விசாரணையில் திறம்பட செயல்பட்ட தமிழ்நாடு காவல்துறையை சார்ந்த மதுகுமாரி (காவல் கண்காணிப்பாளர்/தளவாய்) மற்றும் சதீஷ்குமார் ( காவல் கண்காணிப்பாளர்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்