தவெக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாததை கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிர் அணி சார்பில் இன்று(31-10-2026) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல திருச்சி மத்திய, வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களின் மகளிர் அணி சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகாமையில் திமுக மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த் தலைமையில்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டு தவெக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் திருச்சி மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி,
மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா, நிர்வாகிகள் விஜயா ஜெயராஜ், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஜெ. கலைச்செல்வி, வாசுகி, துறையூர் கிருபா, ரம்யா பேகம் உட்பட ஏராளமான மகளிர் கலந்து கொண்டனர்.


Comments are closed.