தொடர் திருட்டு, பட்டாகத்தியுடன் பவனி !திருச்சி மாநகராட்சி 20வது வார்டில் பொதுமக்கள் அமைதிக்கு வேட்டு! வேடிக்கை பார்க்கிறதா மாநகர காவல்துறை? ( சிசிடிவி காட்சிகள் இணைப்பு )
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 20 வது வார்டு பெரிய கடை வீதி, ராணி தெரு, வடக்கு ராணி தெரு, சௌராஷ்டிரா தெரு, சுண்ணாம்பு கார வளையல் தெரு, உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது. காந்தி மார்க்கெட் மற்றும் பஜார் ஆகியவை இந்த வார்டில் இருப்பதால் இரவு பகல் என எந்நேரமும் மக்கள் நடமாட்டம் இப்பகுதியில் அதிகமாக இருக்கும். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் திருட்டு கும்பல் தொடர்ச்சியாக கைவரிசையை காட்டி வருகின்றனர்.சமீப காலமாக தொடர் திருட்டு வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களும் கஞ்சா புழக்கமும் அதிகரித்து வருவதால் வீட்டைவிட்டுக்கூட நிம்மதியாக வெளியே வர முடிவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வீட்டுக்கு முன்புறமாக நிறுத்தப்படும் டூ வீலர் கடைகளில் வைத்திருக்கும் செல்போன் ஆகியவை தொடர்ந்து திருடப்படும் அவலமும் அரங்கேறி வருகிறது. பொதுமக்களுக்கு துணையாக நிற்க வேண்டிய 20வது வார்டு திமுக கவுன்சிலர் எல்ஐசி சங்கரோ இது பற்றி எந்த அக்கறையும் காட்டுவதில்லை என கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்வதில்லை. மேலும் காந்தி மார்க்கெட் பகுதி, பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் கஞ்சா போதையில் இளைஞர்கள் பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாகவும் வேதனையுடன் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பொதுமக்களின் உயிர்க்கும் உடமைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் 20 வது வார்டில் மீண்டும் பழைய அமைதியை கொண்டு வரவும் மாநகர போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Comments are closed.