Rock Fort Times
Online News

தமிழக கபடி வீராங்கனைகள் மீது பஞ்சாபில் தாக்குதல்! ( வீடியோ இணைப்பு )

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியில், தமிழக வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர் மீதான தாக்குதலுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 2024-2025 ஆண் ஆண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்களுக்கான கபடி போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருகாசி பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து 4 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த வீராங்கனைகள் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இன்று நடந்த காலிறுதிப் போட்டியில், தமிழகத்தின் அன்னை தெரசா பல்கலைக்கழகத்துக்கும், பிஹார் மாநிலம் தர்பாங்கா பல்கலைக்கழகத்துக்கும் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது எதிரணி வீராங்கனைகள் ஃபவுல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், தமிழக வீராங்கனைகள் நடுவரிடம் முறையிட்டுள்ளனர். ஆனால், நடுவர் தமிழக வீராங்கனைகளையும், பயிற்சியாளரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு கைக்கலப்பு ஏற்பட்டு, பயிற்சியாளரை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.இதைத்தொடர்ந்து அந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்