தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று(ஏப்.23) முடிவடைந்தது முன்னதாக திமுக தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு திரட்டினர். வாக்குப்பதிவு நேற்று முடிந்ததால், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்லவும், ஓட்டு எண்ணிக்கைக்கு ஓரிரு நாள் முன்னதாக தொகுதிகளுக்கு திரும்பவும் திட்டமிட்டுள்ளனர். அந்தவகையில் துணை முதல்வர் உதயநிதி, அவரது மனைவி, மகனுடன் இன்று காலை துபாய், லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு புறப்பட்டு சென்றார்.

Comments are closed.