இலால்குடி இந்திரன் பயிற்சி மையம் மற்றும் தேலேந்திர குல வேளாளர் அறக்கட்டளை சார்பில் 2022-23 ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்பெற்ற மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இலால்குடி பெரியார் மஹாலில் நடைபெற்ற இவ்விழாவில் வழக்கறிஞர் கே.மன்னர்மன்னன் தலைமை தாங்கினர். ஓய்வுபெற்ற டி.ஆர்.ஓ சி.பெரியசாமி, ஓய்வுபெற்ற கிளைச்சிறை கண்காணிப்பாளர் டி.பாக்கியராஜ், எம்.குணசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொழிலதிபரும் திமுக பிரமுகருமான இன்ஜினியர் பெருவை.எஸ்.முருகவேல்,டாக்டர் என்.ராமமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் தேவேந்திர சேனாவின் தலைவர் ஆர்.சேகர் பொதுச்செயலாளர் பி.மனோகர்,வி.எஸ்.துரை பட்டியல் வெளியேற்ற நூல் ஆசிரியர் வி.எம்.செல்வராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டர். 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, நினைவு பரிசு ஆகியவை வழங்கப்பட்டது. முடிவில் என்.பெரியசாமி நன்றி கூறினார்.இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.