Rock Fort Times
Online News

குரூப் 2, 2ஏ காலி பணியிடங்கள் அதிகரிப்பு – டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு…

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளில் உள்ள காலி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு 2022ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி நடந்தது. முதன்மைத் தேர்வு முடிவுகள் வரும் ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன. இந்நிலையில் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அந்த வகையில் ஏற்கெனவே இருந்த காலிப்பணியிடங்களுடன் புதிதாக 620 காலி பணியிடங்கள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குரூப்-2 தேர்வுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கை 5,240 லிருந்து 5,860 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவை மாற்றமா? முதல்வர் மு.க .ஸ்டாலின் பதில்...

1 of 842

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்