ரூ.33.29 கோடி மதிப்பீட்டில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் புதிய கட்டுமான பணி – அடிக்கல் நாட்டிய துணை முதல்அமைச்சரை வரவேற்றார் சாமி டெவலப்பர்ஸ் இளமுருகன்
அரசு முறை பயணமாக ஜனவரி 28ம்தேதியான நேற்று திருச்சிக்கு வந்திருந்த தமிழ்நாடு துணை முதல்அமைச்சர் உதயநிதிஸ்டாலின், ரூ.33.29 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கான புதிய கட்டுமான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். இதில் மொத்தம் 526 வீடுகள் கட்டப்படுகிறது. நான்கு பிளாக்குகளாக 131 வீடுகள் வீதம் 524 வீடுகள் கட்டப்படுகிறது. மற்ற இரண்டு வீடுகள் தனி வீடுகளாக அமைக்கப்பட உள்ளன. மொத்தம் 10.167 ஏக்கரில் அனைத்து வசதிகளுடன் அமைகிறது. முன்னதாக அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை இந்த திட்டத்தின் ஒப்பந்ததாரரும், சாமி டெவலப்பர்ஸ் மற்றும் பிளாசம் ஹோட்டல் இயக்குனருமான இளமுருகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வெளிநாடு வாழ் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.