மணப்பாறையில் 25 ஆயிரம் பேர் பங்கேற்ற சாரண, சாரணிய இயக்கத்தின் வைர விழா: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…!
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி இன்று(28-01-2025) தொடங்கியது. இந்த விழாவில் நிகழ்வின் தலைவர் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கலைஞர் நூற்றாண்டு நினைவு புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்து சிறப்பித்தார். இயக்கத்தின் தேசிய முதன்மை ஆணையர் கே.கே.கண்டேல்வால்(ஓய்வு) மற்றும் இயக்கத்தின் தலைவர் அனில்குமார் ஜெயின், தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவர்- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்த இந்நிகழ்வில் அமைச்சர்-வைரவிழாவின் துணைத் தலைவர் கே.என்.நேரு, அமைச்சர்-வைரவிழாவின் துணைத் தலைவர் மா.சுப்பிரமணியன் , அமைச்சர்- வைரவிழாவின் துணைத் தலைவர் எஸ்.எஸ்.சிவசங்கர் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரை வைகோ , ஜோதிமணி , சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரராஜன், பழனியாண்டி, முத்துராஜா, அப்துல் சமது, பள்ளிக் கல்வித் துறை அரசு செயலாளர் மதுமதி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். சாரண சாரணியர் இயக்க வைரவிலா தொடர்ந்து 7 நாட்கள் நடக்கிறது. இதற்காக இந்தியா முழுவதிலும் இருந்து சாரண, சாரணியர் இயக்கத்தினர் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளனர்.
Comments are closed.