சபரிமலையில் வரலாறு காணாத வகையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளதால் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலை பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால் பக்தர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தானம் குழு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலகால, மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது சபரிமலையில் சராசரியாக ஒரு நாளைக்கு 80,000-90,000 பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
சபரிமலையில் ஒரு நாளைக்கு மொத்த தரிசன நேரம் 17 மணி நேரம் ஆகும். காலை 3 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மற்றும் மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 75 பக்தர்கள் பதினெட்டாம் படிகளில் ஏறினால், அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்கு 4,500 பக்தர்கள் சன்னிதானம் செல்ல முடியும். ஒரு நாளைக்கு 17 மணிநேரம் கோவில் திறந்திருக்கும் போது பதினெட்டாம் படிகளில் ஏறக்கூடிய அதிகபட்ச பக்தர்களின் எண்ணிக்கை 76,500 ஆக இருக்கும். தரிசன நேரத்தை அதிகரித்தால், முந்தைய திருவிழாக் காலத்தில் செய்ததைப் போல, ஒரே நாளில் மொத்தம் 85,500 பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, சபரிமலையில் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் சபரிமலையில் தரிசன நேரம் 1 மணி நேரம் அதிகரிக்கப்பட்டு மாலை 4 மணிக்கு பதிலாக மதியம் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
ஸ்ரீரங்கம் ஹனுமந்த வாகனத்தில்நம்பெருமாள் சிறப்புகள்..

Now Playing
🔴 ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (6-ம் திருநாள் காலை ) கற்பக விருக்ஷ வாகனம்

Now Playing
நெல்லையில் பிரபலமான இருட்டுக் கடை அல்வா வாங்கி சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Now Playing
🔴 சுக்ரவார தோப்புஆஸ்தான மண்டபத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு யானை வாகன மண்டபம் சேருதல்

Now Playing
🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (5-ம் நாள் மாலை ) அனுமந்த வாகனத்தில் புறப்பாடு
1
of 986

Comments are closed, but trackbacks and pingbacks are open.