Rock Fort Times
Online News

திருச்சி, மலைக்கோட்டை விநாயகருக்கு 27 வகையான அபிஷேகம்; பக்தர்கள் தரிசனம்!

பிரசித்தி பெற்ற திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி ஆலயத்தில் கடந்த செப்டம்பர் 14 -ம் தேதி தொடங்கி செப்டம்பர் 27 -ம் தேதியான நாளை வரை 14 நாட்கள் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெறும். விநாயகர் சதுர்த்தி விழாவின் 13ம் நாளான இன்று(செப்டம்பர் 26) மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கு (உற்சவருக்கு) சந்தனம், குங்குமம், பன்னீர், பால், தேன், நெய், பஞ்சாமிர்தம், விபூதி, புஷ்பம், இளநீர் மாதுளை, உள்ளிட்ட 27வகையான மகா அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து அன்னாபிஷேகமும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சுவாமியை தரிசனம் செய்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்