திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியலில் காணிக்கை பொருட்களை செலுத்துவது வழக்கம். அந்த காணிக்கை பொருட்கள் அவ்வப்போது எண்ணப்படுகிறது. அந்தவகையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்னும் பணி நடைபெற்றது. கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வி.எஸ்.பி. இளங்கோவன், கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பிச்சைமணி, இராஜ.சுகந்தி, சே.லெட்சுமணன் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். முழுமையாக எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், ரூ.81 லட்சத்து 37ஆயிரத்து 930 ரொக்கமும், 1 கிலோ 529 கிராம் தங்கமும், 3 கிலோ 403 கிராம் வெள்ளியும், 204 வெளிநாட்டு பணமும், 676 வெளிநாட்டு நாணயங்களும் கிடைக்கப்பெற்றுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உபகோயில்களான ஆதிமாரியம்மன் திருக்கோயிலில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 480 ரொக்கமும், உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயிலில் ரூ.11, 352-ம், போஜீசுவரர் கோயிலில் ரூ1,301-ம் கிடைக்கப் பெற்றுள்ளது.
Comments are closed.