மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர்ஏசியா விமானம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த ஒரு பயணியை தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்ததில் அவர் தனது உடலில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை எடை போட்டு பார்த்த போது 1 கிலோ 141 கிராம் இருந்தது. அதன் இந்திய மதிப்பு ரூ.94 லட்சத்து 53 ஆயிரத்து 185 என அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கத்தை கடத்தி வந்த நபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.