Rock Fort Times
Online News

ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது…!

கரூா் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ். இவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரும், அவரது தம்பி சேகா் உள்பட 3 போ் சோ்ந்து மிரட்டி எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது நிலத்தை மோசடி செய்து எழுதி வாங்கிவிட்டதாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், அவரது தம்பி சேகா் உள்பட 3 போ் மீது கரூா் நகர காவல்நிலையத்தில் பிரகாஷ் புகாா் செய்தாா். இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கேட்டு கரூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் எம்.ஆா். விஜயபாஸ்கா் தனது வழக்கறிஞர்கள் மூலம் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனு மீதான தீா்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை அருகில் இருந்து கவனித்துக்கொள்ள இடைக்கால ஜாமீன் கேட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் எம்.ஆா். விஜயபாஸ்கா் மனு தாக்கல் செய்திருந்தாா்.
அந்த மனு மீது விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை நீதிபதி ஆா்.சண்முகசுந்தரம், தந்தையின் உடல்நிலையை காரணம் காட்டி குற்றம்சாட்டப்பட்டவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தாா்.

இதனால், எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்தார். கரூர் மாவட்ட சிபிசிஐடி போலீசார் 8 தனி படைகள் அமைத்து தலைமறைவான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி உள்ளிட்டோரை தேடி வந்தனர். அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறவினர்கள், அதிமுக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.   இந்நிலையில், கேரளாவில் தலை மறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் தமிழகம் அழைத்து வருகின்றனர்.

🔴: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் 6-ம் திருநாள்

1 of 850

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்