Rock Fort Times
Online News

துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.11 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்….

திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்ல விமானம் ஒன்று தயார் நிலையில் இருந்தது. அதில், பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆண் பயணி ஒருவர் வைத்திருந்த செல்போன் சார்ஜர் மற்றும் பவர் பேங்க்குக்குளில்  சவுதி அரேபிய ரியால்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ரியால்களின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 10 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் என அதிகாரி ஒருவர் தொிவித்தாா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்