Rock Fort Times
Online News

திருச்செந்தூர் கடற்கரையில் ஜெல்லி மீன்கள்: பக்தர்களுக்கு எச்சரிக்கை…!

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவர்கள் கடலில் புனித நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்தவகையில், இன்று(ஜூன் 11) வழக்கம் போல பக்தர்கள் கடலில் நீராடிக்கொண்டு இருந்தனர். அப்போது கடற்கரையில் கண்ணாடி வடிவிலான ஜெல்லி மீன்கள் காணப்பட்டன. அந்த மீன்கள் கடலில் நீராடும் பக்தர்களின் உடலில் படும்போது கடுமையான எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. கடலில் குளிக்கும்போது ஜெல்லி மீன்கள் தென்பட்டால் உடனடியாக கரைக்கு வர வேண்டும் என பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கடலோர பாதுகாப்பு குழுவினர் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்