Rock Fort Times
Online News

அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த தவெக எம்.எல்.ஏ.வுக்கு குவியும் பாராட்டு…!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். புதிய ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து எளிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.முதலமைச்சர் ஜோசப் விஜய், மதிய உணவு எடுத்துக்கொண்டு தலைமைச் செயலகத்திற்கு வந்து காலை முதல் மாலை வரை பணியாற்றுகிறார். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டால் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுகிறார்கள். கோவில் மற்றும் தேவாலயங்களுக்கு அமைச்சர்கள் செல்லும் போது பக்தர்களோடு பக்தர்களாக நின்று சாமி தரிசனம் செய்கின்றனர். இவ்வாறு எளிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மானாமதுரை
த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவன், தனது மகள் தேவமித்ராவை திருப்புவனம் அரசுப்பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்த்துள்ளார். இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனை பார்க்கும் பலரும் சட்டமன்ற உறுப்பினரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து
சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவன் கூறுகையில், தான் அரசு பள்ளியில் தான் படித்தேன். தனது மகளும் அரசுப்பள்ளியிலேயே கல்வி பயில வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்