Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்….

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி ஜனவரி 2-ந் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். விழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி சார்பில் ஸ்ரீரங்கம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் இன்று அகற்றபட்டன. திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட உதவி ஆணையர் வைத்திநாதன் உத்தரவின் பேரில் மாம்பழச்சாலை முதல் அம்மாமண்டபம், ராஜகோபுரம், தெற்குவாசல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, இளநிலை பொறியாளர்கள் பாலமுருகன், ராஜேந்திரன் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது பாதுகாப்பு பணியில் ஸ்ரீரங்கம் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

தமிழக அமைச்சரவை மாற்றமா? முதல்வர் மு.க .ஸ்டாலின் பதில்...

1 of 842

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்