திருச்சியில் முன்னாள் பா.ம.க நிர்வாகி மர்ம கும்பலால் வெட்டி கொலை. (பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் இணைப்பு)
திருச்சி புத்தூர் அரசு தலைமை மருத்துவமனை எதிரே, ஸ்ரீ தாயார் ஹோம் கேர் சர்வீஸ் மற்றும் பிரபு ஆம்புலன்ஸ் ஆகியவற்றை நடத்தி வந்தவர் பிரபு என்கிற பிரபாகரன்.45 வயதாகும் இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் திருச்சி மாவட்ட தொழிற்சங்க செயலாளராக இருந்தவர். இந்நிலையில் நேற்று இரவு பிரபு ஜி.ஹெச் எதிரேயுள்ள தனது நிறுவனத்தில் தனியாக இருந்திருக்கிறார். சரியாக இரவு 9.37 க்கு நான்கு பேர் கொண்ட கும்பல் அவரது அலுவலகத்தில் புகுந்து பிரபுவை சரமாரியாக தலையிலேயே வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த ணை ஆணையர் அன்பு மற்றும் ஜி.ஹெச் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். கொலைசெய்யப்பட்ட பிரபு முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டாரா? தொழில் போட்டியா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.