Rock Fort Times
Online News

இரு தொகுதிகளில் போட்டி: விஜய்க்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி…!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல்களில் சில வேட்பாளர்கள் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இரு தொகுதிகளிலும் வெற்றி பெறும்பட்சத்தில், ஒரு தொகுதியில் தங்களின் பதவியை அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. எனவே, இரு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களிடம், அவர்கள் ராஜினாமா செய்யும் தொகுதிக்கான இடைத்தேர்தல் செலவுகளை ஏற்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என அந்த மனுவில் கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், வேட்பாளர்கள் இரு தொகுதிகளில் போட்டியிடத் தேர்தல் ஆணைய சட்டம் அனுமதியளிக்கிறது. இந்த சட்டப்பிரிவை எதிர்த்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதை சுட்டிக்காட்டி, மனுதாரர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்