மத்திய அரசு பணியில் இருந்து அண்மையில் மாநில அரசின் பணிக்கு திரும்பினார், ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ். இவர் தற்போது நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைச் செயலாளர் கேடர் பதவிக்கு இணையான அந்தஸ்தும், பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது, ராஜேஷ் லக்கானி அந்தத் துறையின் செயலாளராகப் பணியாற்றியவர் ஆவார். மத்திய அரசுப் பணியில் இருந்த அவர், தற்போது மீண்டும் தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி மீது எழுந்துள்ள டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களின் முழுமையான பின்னணி ராஜேஷ் லக்கானிக்கு தெரியும் எனக் கூறப்படுகிறது. அவரிடமிருந்து முழுமையான தகவல்களைப் பெற்று, வழக்கினை மேலும் பலப்படுத்திச் செந்தில் பாலாஜியை இறுக்க தவெக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.