Rock Fort Times
Online News

ஆளுங்கட்சியாக எம்.ஜி.ஆர். இருந்தபோதே இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது…* துரைமுருகன்..!

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. பொதுவாக இடைத்தேர்தல் நடந்தாலே ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என்ற மாயை நிலவி வருகிறது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறுகையில், “ஆளுங்கட்சியாக எம்.ஜி.ஆர் அதிகாரத்தில் இருந்தபோதே, நாங்கள் அண்ணா நகர் மற்றும் மயிலாடுதுறை இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறோம்; எனவே இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும் என்பது ஒன்றும் எழுதப்படாத இலக்கணம் கிடையாது. வரவிருக்கும் இடைத்தேர்தலில் தி.மு.க தனது பலத்தைக் நிரூபித்து வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்